ஹாஜியார்ஹையப்பா ஹாஜியார் அவர்கள் மறைவு
உஸ்வத்துன் ஹஸனா....
Published : 05th Sun, May 2019
இன்று பள்ளப்பட்டிக்கு பேரிழப்பு
*உஸ்வத்துன் ஹஸனா ஒரு வரலாறு*
அல்லாஹ் தான் நாடியவருக்கு ஞானத்தை கொடுக்கிறான் இத்தகைய ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகிறதோ
அவர் அனேக நன்மைகள்
கொடுக்கப்பட்டவாராய் நிச்சயம் ஆகிவிடுகிறார்
எனினும் நல்லறிவுடையோர் தவிற வேறெவரும் சிந்திப்பதில்லை.
(2:269)
1972ம் ஆண்டு சென்னை நகரில் முஸ்லீம் கல்வி மாநாடு ஒன்று நடைபெற்றது.
அதில் இந்தியா முழுவதிலிருந்தும் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
அவர்கள் வழங்கிய கருத்துரைகள்.
கல்வியில் சமுதாயத்தின் நிலை.
முஸ்லீம் மாதர்கள் கல்வியில் பின் தங்கிய பரிதாபம் குறித்து அவர்களின் எழுச்சி மிகு பேருரைகள்.
அதில் கலந்து கொண்ட. பள்ளப்பட்டி முஸ்லீம் இளைஞர்கள் சிலரின் இதயங்களை ஊடுருவின.
அதில் முக்கியமாக. ஹையப்பா ஹாஜியார் அவர்கள் இதயத்தில்
மிக ஆழமாக ஊடுருவின.
மாநாட்டில் கலந்து கொண்டோம்.
கேட்டோம்.
வந்தோம். என்ற என்னம் இல்லாமல்.
பள்ளப்பட்டி முஸ்லீம் பெண்களைப் பற்றியும். அவர்களிடையே
நிலவியும்
உலவியும் வரும் மனநோய்கள்.
மூட நம்பிக்கைகள்.
மார்க்கத்திற்கு முரணான சடங்கு சம்பிரதாயங்கள்.
அனாச்சாரங்கள்.
ஆடம்பர சிலவுகள். சீர்கேடுகள்.
ஆகியவை போன்றவற்றிய சிந்தனைகள் ஓயாமல் அழையாடிய வண்ணம் இருந்தது.
நண்பர்கள் தொடர்ந்து சிந்தித்தனர்.
இத்தகைய சிந்தனைகள். கருத்து பறிமாற்றங்கள். விவாதங்கள்.
விளக்கங்கள்.
திட்டங்கள்.
தீர்மானங்கள் என படிப்படியாக வளர்ந்து.
பள்ளப்பட்டியில் முஸ்லீம் பெண்களுக்கு ஒரு அறிவாலயம் இன்றியமையாதது
என்ற முடிவுக்கு வந்து.
அதன் விளைவாக பள்ளப்பட்டி முஸ்லீம் கல்வி சங்கம் ஒன்று...
வள்ளல் ஹாஜி ஹபீப் ராஜா நினைவு மன்றத்தின் ஒரு கிளையாக முறையோடு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
அடுத்து நம் பெண்களுக்கு எத்தகைய கல்விக்கூடம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தது.
சான்றோர்களால் பல்வேறு கருத்துக்கள் சமர்பிக்கப்பட்டன.
தக்க சான்றுகளுடன் பரிசீலிக்கப்பட்டன.
சமுதாய சிந்தனையுடைய அறிஞர் பெருமக்கள் பலருடன் தொடர்பு கொள்ளப்பட்டது.
உலமா பெருமக்கள்.
கல்வித்துறையில் புகழ் பரப்பும் அறிவு வல்லுனர்கள்.
சமுதாய தலைவர்கள்.
அனைவர்களின் ஆலோசனைகளையும் ஒன்று திரட்டபட்டு ஆராயப்பட்டது.
விருப்பு வெறுப்பின்றி தன்னலம் தற்புகழ்சி மறந்து.
பள்ளப்பட்டி முஸ்லீம் மகளிர் சமுதாயம் அதன் பொன்னான வருங்காலம் மார்க்க மறுமலர்ச்சி
இவைகளை நோக்கமாக கொண்டு....
பரிசீலனை செய்து ஆழமாக சிந்தித்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு தீர்மானத்திற்க்கு வந்தனர்.
அதாவது
மார்க்ககல்வியும்
உலக கல்வியும் இனைந்து கற்பிக்கும் ஓரியண்டல் பெண்கள் கல்விக்கூடம் ஒன்று அழகிய முறையில் நிறுவுவது என்பதே என்று முடிவு செய்யப்பட்டது.
அல்லாஹ் விடம் துவா செய்தார்கள்.
அந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்ற கல்வி சங்க உறுப்பினர்கள் சிலர்
அல்ஹாஜ் எம்.எம். பீர் முஹம்மது (மர்ஹும்) அவர்கள் தலைமையில்.
இந்த சமுதாய நற்பணி ஈடேற கஃபத்துல்லாஹ்வில் உருக்கமாக துவா செய்தார்கள்.
அல்லாஹ் வின் அருள் சுரந்தது.
பள்ளப்பட்டி பெண் பிள்ளைகளுக்கு கல்விக்கண் திறந்தது.
உஸ்வத்துன் ஹஸனா உயர் நிலைப்பள்ளி.
முதன் முதலில்.
திருப்பூர் அர்விந்த் பனியன் கம்பனி அதிபர் ஐனாப் M.S.அலிபாய் அவர்களின் மஜீத் மன்ஜில் பங்களாவில் தற்காலியமாக
1:7:1974. ஆம் திங்களன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அல்லாஹ் வின் திருபெயரால் தொடங்கி தொடரும் ஒவ்வொரு நற்பணியும் இபாதத்தாகும் என்று கருதி.
இப்பள்ளியை கவனத்துடன் நடத்தி வரும் கல்விச்சங்க உறுப்பினர்கள் உளமாற உழைத்தார்கள்.
இந்தியா முழுவதும் பல்கி பெருகி வணிகம் செய்து பொருளீட்டி வரும் பள்ளப்பட்டி வியாபாரிகள்.
வணிகதொடர்புடைய நண்பர்கள் அனைவரும் இந்த பணிக்கு பேராதரவும் பொருளுதவியும் வழங்கி துனை புரிந்தனர்.
இதன் காரனமாக
1975---76ஆம் கல்வி ஆண்டில் நடு நிலைப்பள்ளியாக இருந்த இக் கல்விக்கூடம்.
உயர் நிலை பள்ளியாக மாற்றப்பட்டது.
மனவலம் படைத்த முஸ்லீம் பெரு வணிகர்கள் நன்கொடையால்.
கம்பீரமான புது கட்டிடம் உருவாகியது.
மஜீது மன்ஜிலில் இருந்து பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புதிய அறிவாலயம் பள்ளப்பட்டி மக்களின் கருத்தையும் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது.
ஆண்டு தோறும் அழகிய சாதனைகள்.
உயர்நிலை பள்ளியுடன் தொடக்க நிலை பள்ளியும்.(1முதல்5வரை)
மழழையர் பள்ளியும்.
(L.K.G---U.K.G) யும் இனைக்கப்பட்டன.
இப் பள்ளியில் பயிலும் வசதியற்ற ஏழை மாணவியர்களுக்கு.
பாடபுத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் வழங்கவும்.
மற்றும் பல நற்பணிகளுக்கு உதவவும்.
பள்ளப்பட்டி உஸ்வத்துர் ரசூல் பைத்துல்மால்.
என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
பின்னர் இப்பள்ளியில் சேர்ந்து பயில விரும்பும் வெளியூர் மாணவிகளுக்கென்று உண்டுரை விடுதி (Hostel) ஒன்று உருவாக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய அனைத்து மாணவியர்களும்சிறப்பாக தேறி 100 விழுக்காடு வெற்றியை தேடித்தந்தனர்.
சாதனை இன்று வரை தொடர்கிறது.
அதன் காரணமாக இந்திய அரசாங்கத்தின் சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும்.
மத்திய வக்பு வாரியம்.
பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் உயர்நிலை பள்ளி.
தமிழ்நாட்டின் தலை சிறந்த முஸ்லீம் பள்ளியாக தேர்வு செய்தது.
1981-82ஆம் ஆண்டுக்கான சிறப்பு பரிசாக ரூபாய் 2500 வழங்கியது.
சிறந்த ஆங்கில ஆசிரியராக இப் பள்ளியின் முதல்வரை தேர்ந்து பாராட்டியது.
உஸ்வத்துன் ஹஸனா கல்வி போதனை
உயிரினும் சிறந்த ஒழுக்க பண்பே உஸ்வத்துன் ஹஸனாவின் குறிக்கோள்.
இங்கே முதன்மையான மார்க்ககல்வியுடன் உலக கல்வியும்தொழில் பயிற்சியும்
கற்பிக்கபடுகிறது.
திருமறை ஒழுக்கமும் தன்நம்பிக்கையும் கொண்ட நங்கை நல்லார்களை உருவாக்கும் நெறிமுறைகள் அனைத்தும் கற்றுத்தரபடுகிறது.
இங்கே கல்வி பயிலும் மாணவிகள் அனைவர்களும்.
திருமறையை இலக்கண முறையோடு ஓதுகின்றனர்.
தொழுகையில் பேணுதலாக உள்ளார்.
நோன்பு நோற்கின்றனர்.
துவாக்களைகற்றுக்கொள்கிறார்கள் .
ஹதீஸ் விளக்கங்களை பெறுகின்றார்கள்.
வாழ்க்கையில் நல்லமனைவிமார்களாகவும்
அன்னைமார்களாகவும் விளங்கும் நெறிமுறைகளையும்.
கடமை உணர்வுகளையும் தெரிந்து கொள்கிறார்கள்.
இஸ்லாமிய சமுதாய கட்டுக்கோப்புக்குள் வாழ்ந்து காட்டும் ஆர்வம் பெறுகின்றார்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்து இம்மை மறுமைப்பேறுகளை அடையும் நல்லென்னங்களை வகுத்துக்கொள்கிறார்கள்.
ஏவல் விலக்கல்களை
அறிந்து மூட நம்பிக்கைகளை அறவே விட்டொழிந்து சிக்கனத்தை கடைபிடிக்கின்றனர்.
வணங்கியும் வழங்கியும் வாழும் வாழ்க்கை நெறியை கடைபிடிக்கிறார்கள்.
நாட்டு நடப்பையும் அறிவியல் அரசியல் நடைபெற்றுவரும் மாறுதல்களையும்.
இஸ்லாமிய வரலாற்று நிகழ்சிகளையும்.
தன் எதிர்கால சந்ததியர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர்.
இளமை இதயங்களில் இப்பள்ளியில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான புரட்சி விதைகள் ஊன்றப்படுகின்றன.
ஐந்தாம் வகுப்பு அளவில் கூடபடிக்காத பள்ளப்பட்டி பெண்கள்.
இன்று +2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற நூற்றுக்கனக்கான பெண்மணிகள் கடந்த கால வருடங்களில் உருவாகி உள்ளனர்.
அனைவர்களும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக மின்னுகிறார்கள்.
இதன் காரணாமாக பள்ளப்பட்டியின் பேரும் புகழும் பரவுகிறது.
இவை அனைத்துக்கும் முதல் மூல காரணமாக இருந்த
*ஹையப்பா ஹாஜியார்* அவர்கள் மறைவு.
பள்ளப்பட்டி நகருக்கும் உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப்பள்ளிக்கும்
பேரிழப்பாகவே கருதப்படுகிறது.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரு நாள் மறைந்தே ஆக வேண்டும்.
அந்த அடிப்படையில் ஹையப்பா ஹாஜியார் அவர்கள் மறைவும் நிகழ்ந்துள்ளது.
இந்த உண்மையை புரிந்து கொண்டு
மறைந்த ஹையப்பா ஹாஜியார் அவர்களின் மஃபிரத்திற்கு துவா செய்வோம்.
_____________________________
அன்புடன்அன்வர் பாஷா*
_____________________________
pallapatti makkal social media
Association,
*PALLAPATTI*
pallapatti makkal social media
https://m.facebook.com/story.php?story_fbid=1786653471479877&id=100004057232480