உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
ஒரு லிட்டர் பெட்ரோல் 34 டீசல் 36 ரூபாய்க்கும்
Published : 02nd Sun, Sep 2018
எண்ணெய் வள நாடான UAEக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கும், டீசல் 36 ரூபாய்க்கும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
UAEயுடன் சேர்த்து இன்னொரு எண்ணெய் வள நாடான ஈராக், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், மொரீஷியஸ் , மலேசியாவிற்கும் இந்தியா பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.
உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24,100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும்.