தண்ணீர்.! தண்ணீர்.!
நமதூரின் கணக்கீடுபடி 2500 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்
Published : 18th Wed, Jan 2017
பஞ்சம் என்றவரிகளை எழூதும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது., நமதூரின் பஞ்சநாட்களை நம்மால் மறக்கமுடியுமா.? லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்ததும்.? பெண்கள் தண்ணீர் குடத்துடன் ஆங்காங்கே ஆழ்துளையை நாடி சென்றதையும் மறக்க முடியாது.!! அதன் எதிரொழியாகத்தான் நமதூரின் முன்னால் - மறைந்த MLA.சாலையத்து முஹமது இஸ்மாயில் சாஹிப் அவர்கள். (அல்லாஹ் அன்னவர்களுக்கு சொர்க்கத்தை ஆக்கிஅருள்வானாக...) வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாக காவிரி கூட்டுகுடிநீரை பள்ளபட்டி நகருக்குள் அமைத்து கொடுத்து உதவினார்கள் .. அதன் பிறகு வந்தவர்கள் பொது நலனைபற்றி சிந்திக்காமல் விட்டதால்தான் அனைத்து அதிகாரமும் நம்மை கைவிட்டுபோகவைத்தது... சிந்தியுங்கள் - தண்ணீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த தயாராகுங்கள் -!!!
Thanks: @Pallapattimakkal