செய்திகள்
காய கல்ப் செய்திகள்

பள்ளபட்டி GH ல் வெற்றி விழாக் கொண்டாட்டம்

காய கல்ப்
Published : 21st Thu, Mar 2019


*பள்ளபட்டி GH ல் வெற்றி*
*விழாக் கொண்டாட்டம்*



மத்திய அரசின்
"காய கல்ப்"- திட்டத்தின் கீழ் *பள்ளபட்டி அரசு மருத்துவமனை* மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் *முதலிடத்தை* பெற்றுள்ளது. அரவாக்குறிச்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

கரூர் மாவட்டமே முதல் இரண்டு பரிசுகளை பெற்றது நம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை. இதன் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று காலை பள்ளபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பின் வரும் நிகழ்ச்சிகளுடன் அழகுற நடந்தது.


இந்த வெற்றிக்கு வழி காட்டுதல் வழங்கிய கரூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் *Dr.விஜயகுமார் JD* அவர்களை கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச்சங்க மாவட்ட ஆலோசகர் *பாப்புலர் அபுத்தாஹிர்* பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

களப்பணியில் தன்னலமற்ற சேவையும் ஆலோசனையும் வழங்கிய *கல்யாணி ஹனீபா* அவர்கள் celebration cake வெட்டி மகிழ்வூட்டினார்.

பள்ளபட்டி அரவாக்குறிச்சி ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் முதன்மை பெற முத்தாய்ப்பாய் முழு நேர அர்ப்பணிப்பு வழங்கி கொண்டிருக்கும் *Dr.ராமராஜ்* அவர்கட்கு FREINDS FEDERATION செயலாளர் *தோட்டம் சாதிக்* அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


களப்பணியிலும், கட்டுமானப்பணிகளிலும் பொருளுதவியுடன் இலவச ஆலோசனையும் வழங்கி கொண்டிருக்கும் *கல்யாணி ஹனீபா*, விரைவில் இயங்க உள்ள DIALYSIS பிரிவிற்கான கட்டிட உட்புற தேவைகளை வடிவமைத்து தர உள்ள FREINDS FEDERATION செயலாளர் *தோட்டம் சாதிக்,* நிதியுதவி பெறுவதில் வழிகாட்டுதலிலும், பத்திரிக்கைகள் மீடியாக்கள் வாட்சப் போன்ற வலை தளங்களில் நம் மருத்துவமனையின் புகழ் பரப்பி கொண்டிருக்கும் *பாப்புலர் எக்ஸ்பிரஸ்* அட்மின் பாப்புலர் அபு,பேவர் பிளாக் கற்கள் பதித்து அழகு படுத்திய *SVS LOGU,* கரூர் GH பெண் மருத்துவ அதிகாரி *Dr.விஜயபுஷ்பா,* பள்ளபட்டி GH ன் Senior Nurse *கலைச்செல்வி, சாந்தி மற்றும் செவிலியர்கள்* ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தப்பட்டார்கள்.

25 லட்சம் நன்கொடை வழங்கிய *லிங்கம நாயக்கன் பட்டியை* சேர்ந்தவர்கள், மரக்கன்றுகள் கூண்டுடன் அமைத்து தந்த *பசுமை பள்ளபட்டி* நண்பர்கள், ஸ்டிக்கர்ஸ் போஸ்டர்ஸ் வடிவமைப்பு செய்த *ஊட்டி டிஜிட்டல்* மன்சூர் மற்றும் பள்ளபட்டி மருத்துவமணையின் வளர்ச்சிக்கு உதவிட்ட அத்துணை நல் உள்ளங்களுக்கும், சக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்பிற்கும் *Dr.ராமராஜ்* அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.


இந்த வெற்றியின் பலனாய் *இரவு நேர மருத்துவர்* நிரந்தர பணி அமர்த்த உள்ளதாக *JD விஜயகுமார்* அவர்கள் தெரிவித்தது பள்ளபட்டி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

பெண் மருத்துவர் *Dr.சுதா,* துணை பெண் மருத்துவர் *Dr காயத்ரி,* லேப் டெக்னிசியன் *தங்க பாண்டியன்,* பார்மசிஸ்ட் *ரஜாக்,* பெண் செவிலியர்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் கலந்து வெற்றி விழா கொண்டாடினர்.



அதிகம் படிக்கப்பட்டது
Card image
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு | 14th Sun, Oct 2018
Card image
மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா
மரண அறிவிப்பு | 30th Sun, Sep 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*