செய்திகள்
பள்ளப்பட்டி செய்திகள்

மீண்டும் எமர்ஜென்சியா என நினைக்கத்தோன்றும் நிலையில் இன்று பள்ளப்பட்டி.....

பள்ளப்பட்டி
Published : 23rd Mon, Mar 2020

*மீண்டும் எமர்ஜென்சியா என நினைக்கத்தோன்றும் நிலையில் இன்று பள்ளப்பட்டி*



*இந்த பதிவு பள்ளபட்டி மக்களுக்கும் குறிப்பாக நம் குடும்பத்தலைவிகளுக்குமான ஒரு விழிப்புணர்வு பதிவு*

*பள்ளப்பட்டியில் உள்ள பெரும்பாலானோர் வடமாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தின் பற்பல இடங்களிலும் சிறு-குறு வணிகர்களாகவும், அதிலும் அதிகப்படியான நபர்கள் சம்பளதாரர்களாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.*

*பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களாலும் வட மாநிலங்களில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலைகளாலும் நம் மண்ணின் மைந்தர்கள் மிகவும் சிரமமான சூழலில் தங்கள் வணிகத்தை நடத்தி வருவதை நாம் கண்கூடாக அறிந்து வருகிறோம். இவர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பாக சீட்டுக்கு பணம் கட்டி முதிர்வுத் தொகை வருவதற்கு முன்பாகவே பணத்தை எடுத்து அதன் சுழற்சியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சீட்டு கம்பெனி நடத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் சரியான வசூல் இல்லை என்ற கவலையான சூழலை தெரிவிக்கின்றனர்.*

*பள்ளப்பட்டியின் 60 % பொருளாதாரம் சீட்டு என்னும் தண்டவாளத்தில்தான் ஓடுகிறது என மஹ்பூப் அலி ஹாஜியார் நகைச்சுவையாக கூறினார். இது முற்றிலும் உண்மையே. அவ்விதமே சீட்டுப்பணத்தை முன் கூட்டியே எடுத்தாலும் திருமணம் நகை வீடு கட்டுமானம் போன்ற அத்யாவசிய தேவைகளுக்கு பயன் படுத்தாமல் கார் பைக் வாங்குதல் நண்பர்களுடன் டூர் செல்லுதல் போன்ற ஆடம்பர செலவுகளுக்கு பயன் படுத்தி விரயம் செய்கின்றனர்.*

*அண்மைக் காலமாக வட மாநிலங்களிலிருந்து பள்ளபட்டி வரும் நமது நண்பர்கள் சரியான வசூல் இல்லை என்ற செய்தியினை கவலையுடன் தெரிவிக்கின்றனர். அதுவும் கொரோனா எதிரொலிக்க பிறகு மிகவும் மோசமான சூழல் என்கின்றனர். குர்லா கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸில் இன்று சோலாப்பூரிலிருந்து அணியணியாக வந்தவர்களிடம் பேசிய போது வடமாநிலங்களில் வசூலுக்கு போனால் _தஸ் தின் நயீ ஆனா_ என சொல்கிறார்களாம். பத்து நாளைக்கு யாரும் வர வேண்டாம் என்கிறார்களாம்.*

*தமிழகத்தை பொறுத்தமட்டில் ரெடிமேட் ஜவுளி செப்பல் மருந்து வணிகம் ஷாப்பிங் செய்யும் நம் நண்பர்கள் சப்ளையர்க்கு பேமெண்ட் செய்வதிலேயே சிரமம் இருப்பதாகவும் வியாபாரம் குறைந்துவிட்டதால் ஆட்களுக்கு சம்பளம் தர முடியாத சூழல் ஏற்படுவதாகும் ஆகவே ஆட்களை குறைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். அவ்விதமே ஆட்களை வீட்டுக்கு அனுப்பினால் அவர்களது குடும்பமும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகுமே. இதற்கு மாற்று வழி என்ன.*

*ஆகவே இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழ குடும்ப தலைவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.நிலைமை சீராகும் வரை தேவையற்ற ஆடம்பரங்கள் நிச்சயதார்த்தம் பெயர் சூட்டுதல் மார்க்க கல்யாணம் போன்ற விழாக்களை முற்றிலும் தவிர்க்க செய்யுங்கள் திருமணத்தில் தேவயற்ற ஆடம்பர ஜோடனைகளை தவிர்த்து மிகவும் எளிமையாக கூட்டமின்றி நடத்த செய்யுங்கள். மறுவீடு முற்றிலும் தவிர்க்க செய்யுங்கள். வரும் வாரங்களில் பள்ளப்பட்டியில் நடைபெறும் திருமணங்களில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுத்து சுருக்கமாக நடத்த செய்யுங்கள்.*

*அடுத்த மாதம் ரமலான் ஆரம்பம் ஆக உள்ளதால் அதற்கான தேவைகளும் அதற்கு அடுத்த மாதங்களில் பள்ளி கட்டணங்களும் அதற்கடுத்து பக்ரீத் செலவினங்களும் தொடர்ந்து வர உள்ளதால் முன்கூட்டியே சிக்கனமாக வாழ்ந்து ஆடம்பரங்களை தவிர்த்து ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ இன்றிலிருந்தே முயற்சிக்க செய்யுங்கள்.*


பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா மற்றும் ஊர் பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி
இந்த பதிவு இங்கே
அவசியமாகிறது


அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது. | 22nd Sun, Jan 2017
Card image
ஜமாஅதுல் உலமா சபை
பள்ளப்பட்டி நகர | 15th Wed, Jan 2020
Card image
ACCIDENT at PALLAPATTI one dead
பள்ளபட்டி முக்கிய செய்தி | 23rd Sun, Dec 2018
Card image
கோரையூத்து ஹபீபுல்லா அவர்கள்...
மரண அறிவிப்பு | 12th Sun, Jan 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*