பள்ளபட்டி சின்னக்கடை வீதியில் நடந்த ஒரு அசம்பாவிதம்...
இன்று காலை
Published : 21st Sat, Sep 2019
பள்ளபட்டி சின்னக்கடை வீதியில் நடந்த ஒரு அசம்பாவிதம்
*இன்று காலை பெண்கள் பள்ளி செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த சித்திக் ஆட்டோ பாப்புலர் மெடிக்கல்ஸ் அருகே வரும் பொழுது தலாபட்டணம் ஜாபர் வீட்டு அருகில் அன்மையில் குடிநீர் பராமரிப்பிற்காக தோண்டப்பட்டு மூடப்பட்டு சிமென்ட் கான்க்ரீட் போட்ட ரோட்டில் திடீரென இறங்கியது. குழந்தைகள் ஓவென அலறல். பேரூராட்சி நிர்வாகத்தால் அண்மையில் சரியாக சமன் செய்யப் படாததால் இந்த அசம்பாவிதம்.அந்த கான்ட்ராக்டர் சரியாக தண்ணீர் ஊற்றி திம்ஸ் அடித்து முறையாக அந்த குழியை மூடாமல் ஒப்புக்கு சரி செய்து சென்று விட்டார். இதனாலேயே ரோட்டில் குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ பள்ளத்தில் சரிந்தது. நல்லகாலம் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆட்டோவை கீழே விழாமலும் குழந்தைகளையும் பாதுகாப்பு இறக்கி காப்பாற்றி விட்டார்கள். இதுபோன்ற தரமற்ற காண்ட்ராக்டர்களை தவிர்த்து பேரூராட்சி இனியாவது கவனத்தில் கொண்டு தரமான கான்ட்ராக்டர்களிடம் வேலைக்கு கொடுக்க வேண்டும் என இதன் மூலம் பொதுமக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்*
*ஒரு வேளை ஆட்டோவிற்கு பதிலாக லாரியின் டயர் அந்த பள்ளத்தில் இறங்கியிருந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். இது அண்மையில் செய்யப்பட்ட வேலை என்பதும் பள்ளபட்டியின் Ex Chairman தேவைக்காக போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது*
*விஐபி வேலைக்கே இந்த கதி என்றால் மற்றவர்களின் நிலை*
*கடந்த வருடங்களில் பள்ளப்பட்டியில் போடப்பட்ட சிமெண்ட் சாலைகளை ஒரு முறை பார்த்தாலே தெரியும். இந்த காண்ட்ராக்டர்களின் அவல நிலையும் அதற்கு துணை போன அதிகாரிகளின் நிலைப்பாடும்*
*கடந்த வருடங்களில் இரவு நேரத்தில் சின்னக்கடைவீதியில் போடப்பட்ட சிமென்ட் சாலை போடும் போது நானே விடிய விடிய இருந்து கண்கூடாக பார்த்தது. 70 சட்டி மணலுக்கு 3 சட்டி சிமன்ட் மட்டுமே கலவை போட்டு அவர்கள் அந்த ரோட்டை போட்டதை இப்போது வந்து பார்த்தாலும் அவலம் புரியும். தெருவை கூட்டினால் மணல் மணலாக வந்து கொண்டே இருக்கும்*
*இது போன்ற அவலங்கள் இனியாவது தொடராமல் இருக்க பேரூராட்சி கவனத்தில் செயல்பட வேண்டும்*
*நாட்டின் முன்னேற்றமும் அழகும் ஆரோக்கியமும் நேர்மையான அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களால் மட்டுமே சாத்தியம்*