முஸ்லிம் களின் எதிர்வினையும்
முத்தலாக் தடை சட்டமும்.....
Published : 07th Mon, Jan 2019
முத்தலாக் தடை சட்டமும்..... முஸ்லிம் களின் எதிர்வினையும்.....
முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன?
*நமது ஷரீயத்தே நமக்குதவி...*
ஒரு வழியாக முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி விட்டான்.
இந்த கழிசடை சட்டத்தால் இனிமேல் நடக்கப்போவது என்ன???
*STEP 1* ஒரு முஸ்லிம் பெண், "தன் கணவன் தன்னை முத்தலாக் சொல்லி விட்டார்"என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
*STEP 2* காவல் அதிகாரி உடனே வழக்கு பதிவு செய்து 'இந்த தலாக் செல்லாது.எனவே நீங்கள் இருவரும் கணவன் மனைவிதான்" என்று *தீர்ப்பு* அளிப்பார்.
*STEP 3* இருந்தாலும் முத்தலாக் என்ற பஞ்சமாபாதக தேச விரோத குற்றமிழைத்ததால் கணவனுக்கு மூன்றாண்டுகள் சிறை.
*STEP 4* கணவன் சிறைக்கு சென்றதால் மனைவியும் குழந்தைகளும் நடு ரோட்டில்....
*STEP 5* முத்தலாக் செல்லாது. நீங்கள் இருவரும் இன்னும் கணவன் மனைவிதான்...
என்று காவல் அதிகாரியே *தீர்ப்பு* அளித்து விட்டதால் இஸ்லாம் அனுமதித்த மறுமண உரிமையையும் மனைவி இழக்கிறார்.
*STEP 6* மூன்று ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வரும் கணவன் ஒரு பாவமும் செய்யாத தன்னை சிறைக்கு அனுப்பிய தன் மனைவியோடு நிச்சயமாக சேர்ந்து வாழ மாட்டான் (அவன் கூமுட்டையாக இருந்தாலன்றி...)
*STEP 7* கணவன் ஒரு பக்கம், மனைவி குழந்தைகள் அனாதை யாக மறுபக்கம்.
இப்படியே இந்த வழக்கு இன்னும் பல ஆண்ண்ண்ண்டு கள் ஜவ்வாக இழுத்து கொண்டிருக்கும்.
*இறுதி முடிவு*
புகார் கொடுத்த மனைவி (இந்த சட்டத்தை நம்பி புகார் கொடுத்த பாவத்திற்காக) கணவனுடன் வாழவும் முடியாமல் மறுமணமும் செய்ய முடியாமல் நட்டாற்றில் விடப்படுவார் (யசோதா பென் போல).
தாய் :வாழாவெட்டி
குழந்தை :அனாதை.
புகார் கொடுத்த அந்த இஸ்லாமிய அபலைப்பெண்ணுக்கு..
தன்னுடைய வயிற்றையும் தன் குழந்தைகளின் வயிற்றையும் கழுவ....
இரண்டே வழி தான்.
பிச்சை எடுப்பது....
அல்லது
தன் உடலை விற்பது...
*இதைத்தானே எதிர் பார்த்தான் இந்த ராஜகுமாரன்...*
அவன் எதிர்பார்ப்புக்கு நாம் வைக்க வேண்டிய எதிர் ஆப்பு...
*ஷரீஅத் வழங்கும் தீர்வுகளை கையாள்வது தான்.*
*தீர்வு 1* நமது பெண்பிள்ளைகளுக்கம் ஆண்பிள்ளைகளுக்கும் திருமணத்திற்க்கு முன்பே இல்லற வாழ்க்கை சம்பந்தமான ஷரீஅத் ஆலோசனைகள் (pre maritial counsciling) வழங்கப்பட வேண்டும்.
*தீர்வு 2* ஒவ்வொரு முஹல்லா வாரியாக மாவட்ட வாரியாக ஷரியத் அடிப்படையிலான கவுன்சிலிங் சென்டர்கள் (மாற்று தீர்வு மையங்கள்) மஸ்ஜிது களில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
*தீர்வு 3* அந்த மையங்கள்,
ஷரீயத்நீதிமன்றம்.....
ஷரீயத் கோர்ட்.....
தாருல் கழா.....
போன்றபெயர்களிலோ,
அல்லது கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளிலோ இருக்கக்கூடாது.
*தீர்வு 4* இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அனுமதியின் படி *Alternative Dispute Resolution*(ADR Forum) என்ற சட்டவிதியின் கீழ் *mediation and concsiliation centre* என்ற பெயரில் ஷரீஅத் அடிப்படை யிலான மாற்று தீர்வு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
*தீர்வு 5* இதற்கான முயற்சிகளை அவரவர் தனி தனியாக முன்னெடுக்காமல்,அகில இந்திய அளவில் தலைசிறந்த உலமாக்கள் மற்றும் அறிஞர்களின் வழி காட்டுதலில் நடைபெறும் *அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (ALL INDIA MUSLIM PERSENNOL LAW BOARD)* மூலமாக முன்னெடுக்க வேண்டும்.
*தீர்வு 6* உம்மத்தை பேரழிவிலிருந்து காக்கும் இத்தகைய முயற்சிகளை சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொரு மூமினும் மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் உதவியும் நமக்கு கிடைக்கும்.இன் ஷா அல்லாஹ்.
எதிரிகளின் எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் இந்த உம்மத்தின் ஈமானை அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.
*மௌலானா ஷம்சுதீன் காஸிமி*
உறுப்பினர்,
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், புது டெல்லி.
Ph.94451 63212.