செய்திகள்
நடைபெறவுள்ளது செய்திகள்

இம்மாதம் 26 ஆம் தேதி தப்லீக் இஜ்திமா இனாம்குளத்தூரில்

நடைபெறவுள்ளது
Published : 06th Sun, Jan 2019
*இம்மாதம் 26 ஆம் தேதி தப்லீக் இஜ்திமா இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது நாம் அறிந்ததே.*

*மாஷா அல்லாஹ்!*

*சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் வேலைகள் நடைபெறுகிறது.*

*தமிழகம்,இந்தியா, உலக நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் இன்ஷா அல்லாஹ் வரும் 26 To 28 தேதிகளில் 3 நாள் நடைபெறவுள்ள மாநில இஜ்திமாவில் கலந்து கொள்ள இனாம்குளத்தூர் (திருச்சி மாவட்டம்) வருகின்றனர்.*

*இரவு பகலாக தினம் சுமார் 500 பேர் இஜ்திமா பந்தல் , சுற்றி பிரமாண்டமான செயற்கை குளங்கள் , பாத்ரூம் ,etc.... வேலைகள் செய்து வருகின்றனர்.*

*அல்லாஹ் உதவியால் 60% வேலைகள் முடிவடைந்துள்ளது. 100% பணி ஜனவரி 20 க்குள் முடிவடையலாம் இன்ஷா அல்லாஹ்.*

*திருச்சியிலிருந்து 15 கி.மீ , மணப்பாறையிலிருந்தும் 15 கி.மீ , விராலிமலையிலிருந்து 11 கி.மீ தூரம் to இனாம்குளத்தூர்.*

*சுற்று வட்டார பெரு நகர ஊர்களிலிருந்து அரசு மற்றும் தனியார் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 25 To 29 ல் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.*

*ஜனவரி 26 To 28 மூன்று நாட்கள் நம் குடும்ப விசேச வைபவங்கள் , தொழில் & சுற்றுலா பயணங்களை தவிர்த்து இனாம் குளத்தூரில் நடைபெற யிருக்கும் மாநில இஜ்திமாவில் கலந்து இறைவனின் பொருத்தம் மற்றும் பரக்கத் ரஹ்மத் அடையப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.*

*40 பேர் அமர்ந்து இறைவனின் மார்க்கத்தை பற்றி பேசி துவா செய்யும் சபையில் ஒரு மலக்கும் அமர்ந்து ஆமீன் சொல்கிறார் என்று பெருமக்கள் சொல்வார்கள்.*

*அந்த ஆமீனில் நாமும் பங்கு பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.*

*இது நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இதை இழந்து விட வேண்டாம்.*


*எனவே இனாம் குளத்தூர் இஜ்திமாவில் நாம் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.*

*நன்மையை ஏவியவர் நன்மைக்கு வழி காட்டியவர் நன்மை செய்தவர் போன்ற பயன் பலன் அடைகிறார் (ஹதீஸ்)*

அதிகம் படிக்கப்பட்டது
Card image
நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!
நாசாவுக்கு செயற்கைக்கோள் | 13th Sat, May 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*