செய்திகள்
ஓர் விழிப்புணர்வு செய்தி செய்திகள்

பள்ளபட்டி மக்களுக்கு

ஓர் விழிப்புணர்வு செய்தி
Published : 29th Mon, Oct 2018
*உஷார்* *உஷார்* *உஷார்*

*பள்ளபட்டி மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு செய்தி*

அஸ்ஸலாமு அலைக்கும்.


கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (23/10/2018 அல்லது 24/102018)இதில் ஏதோ ஒரு நாளில் நடந்த சம்பவம்.

தலையூர் பஷீர் ஹாஜியார் வீட்டெதிரில் உள்ள மதரஸாவில்
மாலை நேர மதரஸா முடிந்து இரவு எட்டு மணியளவில் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவர் அவர்கள் வீடிருக்கும் தெருவிற்கு மெயின் ரோடு வழியாக (ஷாநகர் பள்ளி அருகில்) வீட்டிற்கு திரும்பும் பொழுது திடிரென மூன்று பேர் கொண்ட கும்பல் (இரண்டு ஆண்+ஒரு பெண்) அந்த இரண்டு சிறுமிகளையும் கழுத்தை நெறித்து வாயை பொத்தி குழந்தைகள் திமிர முடியாதவாறு இறுக்கி அருகில் உள்ள சிறிய சந்திர்க்குள் தூக்கி சென்றிருக்கின்றனர்.அந்த நேரத்தில் நமதூர் நபர்கள் (ஆண்கள்) நடமாட்டம் இருந்ததால் வாயை சற்று அழுத்தமாக மூட ஒரு குழந்தை மூடியவனின் கையை கடித்துள்ளது இதை பார்த்து மற்றொரு குழந்தையும் கையை கடித்து இரண்டு பேரும் அந்த மூவர் கும்பலிடம் இருந்து தப்பி வந்துள்ளனர்.வந்த *கும்பல் இந்தியில் பேசியதாக சிறுமிகள் தெரிவித்தனர்..*

*இரண்டு ஆண்களும் புர்காவில் பயண்படுத்தும் முகமுடி அணிந்திருக்கின்றனர் எனவே குழந்தைகளால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை*

*கையில் கத்தி வைத்திருந்திருக்கின்றனர்*

*இதன் மூலம் குழந்தைகளை கடத்த முற்பட்டது தெளிவாக தெரிகிறது...*

சிறுமிகளும் அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் பயந்து போய் உள்ளனர்..

இதை பற்றி வெளியே சொன்னால் திரும்ப ஏதேனும் நடந்துவிடுமா என்ற பயத்தில் இதைப் பற்றி பேசவே பயப்படுகின்றனர்

நேற்று (28/10/2018) தான் இந்த தகவல் நமது குழுவுக்கு கிடைத்தது...இதை வெளியே சொல்லாமல் இருந்தால் நாளை இதே போல் வேறு யாருக்கேனும் நிகழலாம் என்பதால்
தெரிந்த செய்தியை நமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இங்கு பதிகிறோம்...

இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சிறுவனை தூக்கியுள்ளனர்....அந்த சிறுவனை தூக்கி கொண்டு சாதாத் நகரில் சிறுநீர் கழிக்க நின்ற நேரத்தில் அந்த சிறுவன் தப்பித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறான்....அங்கேயும் *இந்தியில் தான் உரையாடல் நிகழந்துள்ளது*

எனவே நமதூர் மக்கள் குழந்தைகளை தனியாக எங்கேயும் அனுப்பாதிர்கள்....நீங்களே குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள்.

ஸ்கூல் பிள்ளைகளையும் மதரஸா பிள்ளைகளையும் தனியாக அனுப்பாமல் பிள்ளைகளுடன் சேர்த்து அனுப்பவும்.

தனியாக செல்லும் குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து சென்று அழைத்து வரவும்.

தகவல் உதவி
*பபம//பள்ளபட்டி*

அதிகம் படிக்கப்பட்டது
Card image
சின்ன வானா அப்துல் காதர் அவர்கள்
மரண அறிவிப்பு | 30th Wed, Jan 2019
Card image
திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ... | 18th Wed, Jan 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*